தல பெருமை பார்க்கும் மன நிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி குழந்தையாக நினைத்து பர்த்தால் குழந்தை வடிவிலும் முதியவராக நினைத்து பர்த்தால் வயோதிக வடிவிலும் இளைஞராக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ரா பௌர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது. கோயில் முன்பு உள்ளல்லா சரவணபொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவம் நிவர்த்தியாகி விடும் என்பது சிறப்புடையது. சௌந்தரேஸ்வரர் ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள் பாலிக்கின்றனர். பயந்த சுபாவம் உடைய குழந்தையை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில்...தல பெருமை பார்க்கும் மன நிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி குழந்தையாக நினைத்து பர்த்தால் குழந்தை வடிவிலும் முதியவராக நினைத்து பர்த்தால் வயோதிக வடிவிலும் இளைஞராக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ரா பௌர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது. கோயில் முன்பு உள்ளல்லா சரவணபொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவம் நிவர்த்தியாகி விடும் என்பது சிறப்புடையது. சௌந்தரேஸ்வரர் ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள் பாலிக்கின்றனர். பயந்த சுபாவம் உடைய குழந்தையை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பரா தூணிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சௌந்தரியம் உடயவராக திகழ்கிறார். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விலக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடயவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.நாகப்பட்டினம் பொருல்வைத்தசேரி என்ற கிரமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான்.சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த பரந்த சோழ மன்னன் அச்சிலையின் அழகை பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.அவன் வருத்ததுடன் அருகில் உள்ள ஒரு கிராமதிற்கு வந்தான்.கட்டை விரல்கள் இல்லாத நிலையிலும் கடுமையாக முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான்.அதை அவ்வூரை ஆண்ட குறு நில மனனன் முத்தரசன் பார்த்தான்.அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது.சிற்ப வேலை நிறைவு பெற்றதும் அந்த சிலைக்கு உயிர் வந்து முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது.மன்னன் அந்த நேரத்தில் அதை எட்டிப்பிடி என உத்தரவிட்டான்.காவலர்கள் மயிலை பிடித்தனர் அதன் கால்கள் சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது.எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் எட்டுக்குடி என மாறி தற்போது எட்டுக்குடி ஆனது.அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான் அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான் சிற்பி. முதலில் வடித்த சிலை பொருள்வைத்தசேரி என்ற ஊரிலும் அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.பக்தர்கள் மூலவரை பார்க்கும் மன நிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமியை குழந்தையாக நினத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்துபார்த்தால், வயோதிக வடிவிலும், இளைஞராக நினைத்து பார்த்தால் இளைஞராக வடிவிலும் இவர் காட்சி தருவார்.