இத்திருக்கோயிலானது, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது, இத்திருக்கோயிலுக்கு அருகாமையில் பல பாடல் பெற்ற திருத்தலங்கள் அமையப்பெற்றுள்ளன, அவையாவன 1.இத்திருக்கோயிலுக்கு கிழக்கே 1 கிமீ தொலைவில் திருவாய்மூர் எனும் கிராமத்தில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் எனும் பாடல் பெற்ற ஸ்தலம் அமையப்பெற்றுள்ளது, இது சப்த விடங்கர் ஸ்தலங்களுல் ஒன்றாகும். 2. இத்திருக்கோயிலுக்கு மேற்கே 10 கிமீ தொலைவில் கச்சனம் எனும் கிராமத்தில் அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் சுவாமி திருக்கோயில் எனும் பாடல் பெற்ற ஸ்தலம் அமையப்பெற்றுள்ளது, 3.இத்திருக்கோயிலுக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் திருக்குவளை எனும் கிராமத்தில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் எனும் பாடல் பெற்ற ஸ்தலம் அமையப்பெற்றுள்ளது, இது சப்த விடங்கர் ஸ்தலங்களுல்...