இத்திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளுல் பழமையான கல்வெட்டு 11 ஆம் நுற்றாண்டை சேர்ந்ததாகும், ஜடா வர்மன் , சுந்தரபாண்டியன், காலத்தை சேர்ந்த ஒரு கல்வெட்டு அவரை கோச்சடைய பன்மரான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் என குறிப்பிடுகிறது
கி. பி. 11 மற்றும் 12 நுற்றாண்ட கல்வெட்டுகளில் அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களை திருவாய்மூர் உடையார் என குறிப்பிடுகிறது, மேலும் ஊரின் பெயர் வண்டாழை வேலுர் கூற்றம் எனவும் ராஜேந்திர சோழ வளநாடு எனவும், பரமேஸ்வர சதுர்வேதி மங்கலம் எனவும், சோழ பாண்டிய சதுர்வேதி மங்கலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
இசையிலும், கூத்திலும் வல்லவர்களான தேவரடியார்கள் சிவ தொண்டு செய்து வந்துள்ளனர் .
காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 சிவதலங்களில்...இத்திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளுல் பழமையான கல்வெட்டு 11 ஆம் நுற்றாண்டை சேர்ந்ததாகும், ஜடா வர்மன் , சுந்தரபாண்டியன், காலத்தை சேர்ந்த ஒரு கல்வெட்டு அவரை கோச்சடைய பன்மரான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் என குறிப்பிடுகிறது
கி. பி. 11 மற்றும் 12 நுற்றாண்ட கல்வெட்டுகளில் அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களை திருவாய்மூர் உடையார் என குறிப்பிடுகிறது, மேலும் ஊரின் பெயர் வண்டாழை வேலுர் கூற்றம் எனவும் ராஜேந்திர சோழ வளநாடு எனவும், பரமேஸ்வர சதுர்வேதி மங்கலம் எனவும், சோழ பாண்டிய சதுர்வேதி மங்கலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
இசையிலும், கூத்திலும் வல்லவர்களான தேவரடியார்கள் சிவ தொண்டு செய்து வந்துள்ளனர் .
காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 சிவதலங்களில் 124 வது தலமாக இத்தலம் விளங்குகிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 188 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான சீராவட்டனாற்றின் கரையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடையது.
தேவாரத்தில் திருநாவுக்கரசர் 2 ம் திருமுறையில் கீழ்கண்டவற்றை கண்டதாக பாடுகிறார்.
பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன்
மொய்த்த பூதம் ஆடல் முழவம்
அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன்
கங்கை யாளைக் கோட லரவார்
சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ் கண்டேன்
கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே
மேலும்
மெய்யென்ப ரானார் தருங்கண்டேன்
வேண்டுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்,
கையம் பரணெரித்த காட்சி கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
அன்றவன் தன் வேள்வி யழித்தசான்று
வையம் பரவ விருத்தல் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே,
- என தாம் கண்டவற்றை உரைக்கிறார்.
தல பெருமை
சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.
இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.
சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த ரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு...சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.
இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.
சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த ரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார்.
ஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய் யப்போவதாகக் கூறினர்.
சிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால், வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.
இந்திரனிடம் இருக்கும் சிவலிங் கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.
வாலாசுரனைக் கொன்று அதை வாங்கி வரும்படி யோசனையும் சொன்னார். சமயோசிதமுள்ளவன் கடவுளையும் வெல்வான். முசுகுந்தன் சிவனிடம், அப்படியே செய்கிறேன். ஆனால், அவன் விடங்கரைப் போலவே உள்ள வேறு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம். எனவே, விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும், என்றான்.
சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு பெரும் ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் வந்த முனிவர்கள் மட்டுமின்றி, தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.
உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், ஐயனே தாங்கள் இந்திர லோகத்திலும் இருங்கள். இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உனக்கு கோயில் எழுப்புகிறேன், என்றான். மற்றவர்களும் வற்புறுத்தவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அத்தலத்தில் தங்கியுள்ளார்.