Screen Reader Access     A-AA+
அருள்மிகு காயாரோகணசுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம் நகர், நாகப்பட்டினம் - 611001, நாகப்பட்டினம் .
Arulmigu Kayarohanaswamy Udanurai Neelayathatchiamman Temple, Nagapattinam, Nagapattinam - 611001, Nagapattinam District [TM014608]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் நாகை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் 3 சமயக்குரவர்கள் மற்றும் அருணகிரி நாதராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும். இத்திருக்கோயில் சப்தவிடங்கர் ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 5 ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அதிபத்த நாயனார் ஐக்கியமாகிய ஸ்தலமாகும். அழுகணி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும்.

தல பெருமை

தல புராணம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. சிவராஜதாணி, சேஷபுரம், திருநாகைக்காரோணம் சோழகுலவள்ளிப்பட்டினம் என்றும் சிறப்பு பெயர்களை கொண்டது. நெடுமுடிகிள்ளி சோழன் என்ற சாலிசுக மன்னனால் பூஜிக்கப்பட்ட ஸ்தலம். மகாவிஷ்ணு இழந்த அழகு மீண்டும் கிடைக்க காயாரோகணரை பூஜித்த ஸ்தலம். சர்ப்பராஜன் பிரதிஷ்டை செய்த நாகாபரண கணபதி அருள்பாலிக்கும் ஸ்தலமாகும். இசை மும்மூர்த்திகளால் கீர்த்தனைகள் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. அறுபத்துமூவரில் ஒறுவரான அதிபத்த நாயனார் அவதரித்து முக்தி அடைந்த ஸ்தலமாகும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அழுகணி சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலமாகும். சனிதோஷ நிவர்த்திக்காக சனீஸ்வரனுக்கு பூஜை செய்து எள்ளு பாயாசம் நிவேதனம் செய்யப்படும் ஸ்தலம். சர்ப்பதோஷ நிவர்த்திக்காக...

இலக்கிய பின்புலம்

நாகப்பட்டினம் காயாரோஹணசுவாமி கோயில் (திருநாகைகாரோணம்) காவிரியின் தென்கரையில் உள்ள புனித கோயில்களில் 82வது சிவன் கோயிலாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோருக்குப் புனிதமான இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அகஸ்தியர் திருமணத்தை இறைவன் நிகழ்த்தியதாக ஐதீகம். அதிபத்த நாயனார் பிறந்த தலம் என்று கூறப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகஸ்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விருரகன், பத்திரசேனன், பால்கரன், மித்திரன், காலகண்டன், சந்ததருமன் முதலானோர் வழிபட்ட தலம் என்று நம்பப்படுகிறது. அதிபத்த நாயனார் பிறந்த தலம் நாகப்பட்டினம்.

புராண பின்புலம்

காலத்தால் தொன்மை வாய்ந்த மெய்ஞானத்தால் புகழ்பெற்று விளங்குகின்ற செந்தமிழ் நாட்டில் விண்ணை முட்டும் வண்ணமிகு கோபுரங்களும் வானளாவிய விமானங்களும் கொண்ட தெய்வமணம் பரப்பும் திருத் தலங்கள் பலப்பல. செந்நெல்வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் வான்பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரித்தாயின் தென்கரையில் அமைந்துள்ள 127 சிவத் தலங்களுள் 82-ஆவது சிவத்தலமாக நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. கடல் நாகைக் காரோணம் எனப்பக்தி இலக்கியங்களில் சிறப்பித்துச் சொல்லப்படும் இத்தலத்தின் சிறப்புகள் ஆகும்.