Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொர்ணதாபனேஸ்வரர் திருக்கோயில், சித்தாய்மூர் - 610203, நாகப்பட்டினம் .
Arulmigu Suvarnaesthabaneswarar Temple, Sithaimur - 610203, Nagapattinam District [TM014631]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு: இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்துவந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சிலநாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள்கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்கு பூமாலை தொடுத்துகொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒருபொன்காசை கோயில்வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் பொன்வைத்த நாதர் எனப்பட்டார். சில மாதங்களில் இவள்கர்ப்பமாக இருப்பதுவெளி உலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம்ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை...