தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார். கோயிலுக்கு பக்கத்தில் திருமால் கோயில் (ரெங்கநாதர்சிதிலமடைந்துள்ளது.) முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷிஎன்பவர், இத்தலத்தில்அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடைசாத்தப்பட்டுவிட்டது. எனவே இவர் தேனீவடிவம் எடுத்து சிறு ஓட்டைவழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடுகட்டி இருப்பதை காணலாம். இந்த தேன்கூட்டிற்கு நாள்தோறும் பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல்பெற்ற 274சிவாலயங்களில் இது 169 வது தேவாரத்தலம் ஆகும்.