தல வரலாறு: (கன்று- பசுங்கன்று. ஆப்பு- அக்கன்றைக்கட்டும் சிறுமுளை, நடுதறி- நடப்பட்ட தறி. தறி- முளை) ஒருகாலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னம் வித்யாதரப்பெண் உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக் கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, நீமண்ணுலகத்தில் பிறக்க எனச்சபித்தார். பின்நிகழ்ச்சிஅறியாதுநடித்தசுதாவல்லிகண்கலங்கினாள். என்ன செய்வேன்என பதறினாள். அப்பொழுது இறைவி, நீமண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய் எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ்நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப்பெற்று பிறந்து கமலவல்லி...தல வரலாறு: (கன்று- பசுங்கன்று. ஆப்பு- அக்கன்றைக்கட்டும் சிறுமுளை, நடுதறி- நடப்பட்ட தறி. தறி- முளை) ஒருகாலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னம் வித்யாதரப்பெண் உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக் கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, நீமண்ணுலகத்தில் பிறக்க எனச்சபித்தார். பின்நிகழ்ச்சிஅறியாதுநடித்தசுதாவல்லிகண்கலங்கினாள். என்ன செய்வேன்என பதறினாள். அப்பொழுது இறைவி, நீமண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய் எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ்நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப்பெற்று பிறந்து கமலவல்லி என்னும் திருப்பெயருடன் வளர்ந்து வந்தாள். இடையறாது சிவபெருமானை சிந்தித்து வந்தாள். கமலவல்லி சைவ நெறியில் வளர்ந்து வந்தாள். பழவினைத் தொடர்பால் சிவபூசனை செய்துவந்தாள். திருமுண பருவத்தை அடைந்தாள். பெற்றோர் கோத்ரம்- குலம் பார்த்துதக்கவன் என்று கருதிய ஒருவனுக்கு கமலவல்லியை மணம் செய்வித்தனர். அந்த ஊரிலேயே தனிமாடம் மருங்கமைத்து பெற்றோர் இல்லறத்தை நடத்தச் செய்தனர். கமலவல்லி காரைக்கால் அம்மையாரைப் போன்று இவ்விறைவனுக்கு இனியளாய் நடந்துவந்தாள். எனினும் உயிரிறைவனாகிய சிவபெருமானிடத்து பேரன்பு பூண்டு, தக்க அறங்ளை செய்து வாழ்ந்துவந்தாள். சிவனை இடைவிடாது பூஜை செய்தாள். கணவன் கமலவல்லியின் உயர்வை உணராமல் அவள்சிவனை பூஜிப்பதில் வெறுப்புகொண்டு சிவலிங்கத்தை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டான். கமலவல்லி இதை உணர்ந்து, இல்இறைவனுக்குமாறாக சிவனை பூஜிப்பதா அல்லது சிவபூஜையை விடுவதா என சிந்தித்தாள்.கணவன் அறியாதவாறு சிவபூஜை செய்வது என்ற முடிவிற்கு வந்தாள். தன்வீட்டு பசுங்கன்று கட்டும் தறி ஒன்றை சிவலிங்கமாக பாவித்து பூஜை செய்துவந்தாள். இப்படி இவள்தன் கருத்துக்குமாறாக நடக்கிறாள். என்பதை அறிந்த கணவன் சினம்கொண்டு, அக்கன்று கட்டும் தறியை கோடறி கொண்டு தாக்கினான். உதிரம் வெளிப்பட்டது. கமலவல்லியின் பக்தியை உலகவரும் அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். கமலவல்லியும், கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறிலிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்தலிங்கத் திருமேனி சுயம்புமூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுதறிநாதர் எனப்பட்டார்.அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுதறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடறிவெட்டு உள்ளதைக்காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறிநாதரை வழிபட்டுஅருள்பெற்றான்.