தல பெருமை
திருநீலநக்கநாயனார் தம் மனைவியுடன் இறைவனை வழிபட திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி சிவலிங்கத்தின் மீது விழுந்தது. திருநீலநக்கநாயனரின் மனைவி அன்பின் மிகுதியால் அதனை வாயால் ஊதி அகற்றினார். இதை பார்த்த நாயனார் கடும் கோபமுற்று தன் மனைவியை துறந்தார். அவரது மனைவி பெரும் துயருற்று கோயிலிலேயே இருந்துவிட்டார் . சிவபெருமான் அவ்வம்மையாரின் அன்பை எடுத்துரைத்துக்க நாயனார் கனவில் தோன்றி அவர் மனைவியார் ஊதிய இடம் தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளங்கள் இருப்பதை காட்டி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமைவாய்ந்த ஸ்தலம்.