நாகப்பட்டினம் வட்டம் மற்றும் மாவட்டம், சீயாத்தமங்கை, கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் சட்டப்பிரிவு 46 ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயிலாகும். முன்னொரு காலத்தில் திருநீலநக்கநாயனார் தம் மனைவியுடன் இறைவனை வழிபட திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி சிவலிங்கத்தின் மீது விழுந்தது. திருநீலநக்கநாயனரின் மனைவி அன்பின் மிகுதியால் அதனை வாயால் ஊதி அகற்றினார். இதை பார்த்த நாயனார் கடும் கோபமுற்று தன் மனைவியை துறந்தார். அவரது மனைவி பெரும் துயருற்று கோயிலிலேயே இருந்துவிட்டார் . சிவபெருமான் அவ்வம்மையாரின் அன்பை எடுத்துரைத்துக்க நாயனார் கனவில் தோன்றி அவர் மனைவியார் ஊதிய இடம் தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளங்கள் இருப்பதை காட்டி அவரை...