தல பெருமை
சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் 38வது திருக்கோலம் பைரவர் திருக்கோலமாகும். இலங்கையில் ராவணவதம் முடிந்தவுடன் அந்த தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முற்படுகிறார்.ஆஞ்சநேயரிடம் காசி சென்று சிவலிங்கம் எடுத்து வரும்படி உத்தரவிடுகிறார். காசி சென்று அனுமன் சிவலிங்கத்தை எடுத்து வரும்போது உடன் வந்த மகா பைரவருக்கு இந்த தலத்திலே தங்க வேண்டுமென இச்சை உண்டாகிறது. அனுமனை அசதியில் ஆழ்த்தி இந்த தலத்தில் உறங்கச் செய்தார்.உறக்கத்தில் இருந்த எழுந்த அனுமன் இந்த மகா பைரவரையும், இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் வடபாகத்தில் அமைந்துள்ள காசி லிங்கத்தையும் இந்த தலத்திலேயே விட்டு சென்று உள்ளார். மேலும் இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள ஞானபீடத்தில் சிவபஞ்சாச்சர இயந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.