அடர்ந்த கோடியக்காட்டின் தொடர்ச்சி பகுதிகளும் உப்புநீர் (கடல்நீர்) சூழ்ந்த நிலையில் ஆயக்காரன்புலத்தில் மட்டும் நல்ல நீர் இருந்தது. அதனால் அந்த இடத்தில் அந்தணர்கள் வேதம் ஓதி நீர் எடுத்துச்சென்று வேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தனர். அந்த ஓடை வேதகிரி ஓடை என்ற பெயரோடு இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த காட்டில் அமாவாசை நாளன்று மட்டும் பெரிய ஒளி வடிவம் ஒன்று காட்டுக்கு மேலே தோன்றி கட்டுக்குள் வந்து சென்றது இதை அந்தநர்கள் பார்த்து வந்தார்கள்.
அந்த ஒளி வடிவத்தில் இளவரசனைப்போல் உருவம் ஒன்று தெரிவதும் மறைவதுமாக இருந்தது.இதை பார்த்த அந்தணர்கள் வேத மந்திரம் ஓதி அம்மாவாசை அன்று காட்டில் பூஜை செய்து, அந்த ஒளி மேலே செல்லாமல் இருக்க காவும் கொடுத்தனர்.அன்று அந்த ஒளி...அடர்ந்த கோடியக்காட்டின் தொடர்ச்சி பகுதிகளும் உப்புநீர் (கடல்நீர்) சூழ்ந்த நிலையில் ஆயக்காரன்புலத்தில் மட்டும் நல்ல நீர் இருந்தது. அதனால் அந்த இடத்தில் அந்தணர்கள் வேதம் ஓதி நீர் எடுத்துச்சென்று வேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தனர். அந்த ஓடை வேதகிரி ஓடை என்ற பெயரோடு இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த காட்டில் அமாவாசை நாளன்று மட்டும் பெரிய ஒளி வடிவம் ஒன்று காட்டுக்கு மேலே தோன்றி கட்டுக்குள் வந்து சென்றது இதை அந்தநர்கள் பார்த்து வந்தார்கள்.
அந்த ஒளி வடிவத்தில் இளவரசனைப்போல் உருவம் ஒன்று தெரிவதும் மறைவதுமாக இருந்தது.இதை பார்த்த அந்தணர்கள் வேத மந்திரம் ஓதி அம்மாவாசை அன்று காட்டில் பூஜை செய்து, அந்த ஒளி மேலே செல்லாமல் இருக்க காவும் கொடுத்தனர்.அன்று அந்த ஒளி மேலே செல்லவில்லை. அந்த இடத்தில ஒரு செங்கல் புதைத்து அபிஷேகம் செய்து வந்தனர். அந்த செங்கல் அருகில் பூமி வெடிப்பு ஏற்பட்டு கருங்கல் போன்ற உருவம் தோன்றியது. அது தான் இன்றும் சுயம்பாக வழிபாடு செய்யப்படுகிறது.
மாசி மாதம் மகம் தினத்தில் சுயம்பாக தோன்றி அசரீரியாக யாம் கலியுகத்தின் அவதாரமாக சுயம்பாக தோன்றி அனைவருக்கும் நல்லருள் செய்து,அத்தனை தீய சக்திகளையும் அகற்றவும் குறைகளை தீர்க்கவும் கலியுகத்தின் கலிதீர்க்க, அருள்மிகு கலிதீர்த்த ஐயனாக தோன்றியுள்ளோம் என்றும் அருள்மிகு தூண்டில் கருப்பசுவாமியும் அருள்மிகு மகா வீரப்பசுவாமியும் பரிவார தெய்வங்களாக வைத்துள்ளோம் என்றும் கூறியது.அன்று முதல் இத்தலத்தில் சுவாமியை மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.