தல வரலாறு

திருத்தணிகை மலைக்கோயிலுக்குச் செல்லும் படி வழியின் மையப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கமல விநாயகர் என பெயர் பெற்ற இத்தலத்து விநாயகப் பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கலை வாழை இலைகளில் நிறைவாகயிட்டுப் படைக்கும் பாவாடை படையலை செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை முடிக்கும் வழக்கத்தால் இவ்விநாயகப் பெருமான் பாவாடை விநாயகர் என அழைக்கப்படலானார்.