தல பெருமை

திருத்தணி மலையடிவாரத்தில் இந்த வைணவ திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் இலட்சுமி நரசிம்மர் தியான நிலையில் இருக்கின்றார். அருகில் இலட்சுமி தாயார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி தியான நிலையில் இருக்கும்போது அம்பாளின் சுவாசக்காற்று சுவாமியின் மேல்பட்டு தியான நிலை கலையாமல் இருக்க சுவாமி மற்றும் தாயாருக்கு இடையில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு.