Arulmigu Satchi Pootheswarar Temple, Pazhiyanoor - 631210, Tiruvallur District [TM001519]
×
Temple History
தல பெருமை
காஞ்சிபுரத்தில் புவபைதி என்ற அந்தனர் ஒருவர் இருந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து காசிக்குச் சென்றார். கங்கைநீரைக்கொண்டு விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வந்தார். காசி நகரில் சத்யஞானி என்ற அந்தனர் சிவக்கியானி என்ற மகனுடனும் நவக்கியானி என்ற மகளுடனும் வாழ்ந்து வந்தார். புவபைதியை தன் வீட்டில் விருந்தினராக சிலகாலம் தங்கவைத்து பிறகு தன் மகள் நலக்கியானியைத் திருமணம் செய்து வைத்தார். சிலகாலம் இல்லறம் நடத்திய பின்பு காஞ்சிபுரம் செல்ல புறப்பட்டான். எவ்வளவோ மறுத்தும் நவக்கியானியும், சிவக்கியானியும் உடன் வந்தனர். இரண்டாம் திருமணம் செய்து கொண்ட விஷயம் முதல் மனைவிக்குத் தெரிந்தால் விபரீதமாகிவிடும். எனவே, நவக்கியானியைக் கொன்று விட வேண்டும் என எண்ணினார்...காஞ்சிபுரத்தில் புவபைதி என்ற அந்தனர் ஒருவர் இருந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து காசிக்குச் சென்றார். கங்கைநீரைக்கொண்டு விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வந்தார். காசி நகரில் சத்யஞானி என்ற அந்தனர் சிவக்கியானி என்ற மகனுடனும் நவக்கியானி என்ற மகளுடனும் வாழ்ந்து வந்தார். புவபைதியை தன் வீட்டில் விருந்தினராக சிலகாலம் தங்கவைத்து பிறகு தன் மகள் நலக்கியானியைத் திருமணம் செய்து வைத்தார். சிலகாலம் இல்லறம் நடத்திய பின்பு காஞ்சிபுரம் செல்ல புறப்பட்டான். எவ்வளவோ மறுத்தும் நவக்கியானியும், சிவக்கியானியும் உடன் வந்தனர். இரண்டாம் திருமணம் செய்து கொண்ட விஷயம் முதல் மனைவிக்குத் தெரிந்தால் விபரீதமாகிவிடும். எனவே, நவக்கியானியைக் கொன்று விட வேண்டும் என எண்ணினார் புவபைதி.
திருவாலங்காட்டிற்கு வரும்போது களைப்பின் மிகுதியால் புவபைதியின் மடியில் உறங்கினாள் நவக்கியான். இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய புவபைதி மைத்துனன் சிவக்கியானியை தண்ணீர் கொண்டுவர அனுப்பினார். அவன் சென்றவுடன் பெரிய கல்லை மனைவியின் மேல் போட்டு அவளைக் கொன்றார். சிவக்கியானி வந்து பார்த்து துக்கம் மிகக்கொண்டு அழுது புரண்டு பின்பு தங்கையை முறைப்படி அடக்கம் செய்து புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக மாறி காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். வடாரண்யேஸ்வரப் பெருமானுக்கு பூஜை செய்து வந்த குருக்களுக்கு நீலன் தொல்லை கொடுத்து வந்தான். குண்டோதரனை அனுப்பி நீலன் என்ற பேயை அழித்தார் சிவபெருமான் நீலி மட்டும் இருந்தாள்.
புவபைதி மறுபிறவியில் காஞ்சிபுரத்தில் தரிசனன் என்ற பெயர் கொண்டு பிறந்து வாழ்ந்து வந்தான். பெரியவன் ஆனவுடன் விதிவசத்தால் வியாபாரத்திற்கு பழையனூர் வந்தான். நீலிப்பேய் அவனை அடையாளம் கண்டு கொண்டு துரத்தியது. கள்ளிச்செடியைக் கிள்ளி இடுப்பில் வைத்தது. அது குழந்தையாக மாறியது.
தரிசனன் ஓடிச்சென்று பழையனூர் வேளாளர்களிடம் முறையிட்டான். நீலி தரிசனின் இப்போதைய மனைவிபோல் உருக்கொண்டு ஐயா இவர் என் கணவர் என்மீது கோபித்துக்கொண்டு வந்துவிட்டார். என்னைப்பேய் என்கிறார் என்று கூறி குழந்தையை கீழே விட்டவுடன் அது ஓடிச்சென்று தரிசனைக் கட்டிக்கொண்டது. கூழண்டார் கோத்திரத்தை வேளாளர்கள் இன்று இரவு இங்கு தங்குங்கள் அப்படி இவளால் உனக்கு எது நேர்ந்தாலும் அதை நாங்கள் ஏற்கிறோம் என்று இந்த லிங்கத்தின்மீது சத்தியம் செய்ததால் இவருக்கு சாட்சி பூதேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
நடுஇரவில் நீலிப்பேய் தரிசனனைக் கொன்றுவிட்டு ஆலங்காட்டிற்கு வந்து குழந்தையை காலால் மிதித்துக்கொன்று பின் மறைந்து போயிற்று. அவ்வூரில் 70 வேளாளர்கள் இருந்தனர். அதில் ஒருவர் வெளியூர் சென்று தாமதாக வீடு திரும்பினார். அவருக்கு இவ்விஷயம் தெரியாது. மற்றும் 69 வேளாளர்களும் தரிசனனின் அழிவைக்கண்டு அதிர்ச்சி அடைந்து தீமூட்டு அதில் இறங்கினர். பிறகு விஷயத்தைக் கேள்விப்பட்ட ஒரு வேளாளர் ஓர் கலப்பையில் குத்திக்கொண்டு உயிர் துறந்தார்.