வணிகன் ஒருவன் உயிருக்காக எழுபது வேளாண் பெரு மக்கள் தமது உயிரைக் கொடுத்த நீலி சரிதம் நிகழ்ந்த புகழ்பெற்ற திருத்தலம் பழையனூரில் அமைந்த சாட்சி பூதேஸ்வரர் திருத்தலம் ஆகும். இது திருவாலங்காட்டிலிருந்து தெற்கே வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலிலிருந்து 2 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வேளாண் பெருமக்கள் உயிர் நீத்த நிகழ்ச்சிக்கு சான்றாக சிவபெருமான் இத்திருக்கோயிலில் எழுந்தருளி நினைவுச் சின்னமாய் விளங்கும் மணி மண்டபமும் கண்டு வியப்புடையத்தக்க புனிதமிக்க இடங்களாகும்.
| 07:00 AM IST - 11:00 AM IST | |
| 04:00 PM IST - 07:00 PM IST | |
| 07:00 PM IST - 07:00 AM IST | |
| இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) | |