திரு ஆலங்காட்டில் சிவபெருமான் நடனப்போட்டி செய்யப்போவதாக அறிந்த கவுளர்கள், தேவர்கள் முன்கூட்டியே திருவாலங்காட்டைச் சுற்றி தங்கி சிவபூஜை செய்து வந்தனர்.
நாட்டியப்போட்டி முடிந்தவுடன் பிற கடவுளர்களையும் தேவர்களையும் பார்த்து நீங்கள் வேண்டும் வரம் யாது எனக்கேட்டார். அப்போது அவர்கள் சுவாமி தாங்கள் இங்கு நாட்டியப்போட்டி செய்வதை தங்கள் திருவாயில் அறிந்து திருவாலங்காட்டைச் சுற்றி நாங்கள் தங்கி சிவபூஜை செய்துவந்தோம். யார் யார் எந்த எந்த இடங்களில் தங்கினோமோ அந்த அந்த இடங்கள் அவரவர்கள் பெயர்களிலே வழங்கி வரவேண்டும் என வரம் கேட்டனர். சிவபெருமான் அவ்வாரே ஆக என வரமளித்தார்.
அஞ்சனை மைந்தரும் ராமபக்தருமான ஆஞ்சநேயர் தங்கியிருந்த இடம் ஆஞ்சநேயபுரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஆஞ்சநேயர் சிவபூஜை செய்த இடத்தில்...திரு ஆலங்காட்டில் சிவபெருமான் நடனப்போட்டி செய்யப்போவதாக அறிந்த கவுளர்கள், தேவர்கள் முன்கூட்டியே திருவாலங்காட்டைச் சுற்றி தங்கி சிவபூஜை செய்து வந்தனர்.
நாட்டியப்போட்டி முடிந்தவுடன் பிற கடவுளர்களையும் தேவர்களையும் பார்த்து நீங்கள் வேண்டும் வரம் யாது எனக்கேட்டார். அப்போது அவர்கள் சுவாமி தாங்கள் இங்கு நாட்டியப்போட்டி செய்வதை தங்கள் திருவாயில் அறிந்து திருவாலங்காட்டைச் சுற்றி நாங்கள் தங்கி சிவபூஜை செய்துவந்தோம். யார் யார் எந்த எந்த இடங்களில் தங்கினோமோ அந்த அந்த இடங்கள் அவரவர்கள் பெயர்களிலே வழங்கி வரவேண்டும் என வரம் கேட்டனர். சிவபெருமான் அவ்வாரே ஆக என வரமளித்தார்.
அஞ்சனை மைந்தரும் ராமபக்தருமான ஆஞ்சநேயர் தங்கியிருந்த இடம் ஆஞ்சநேயபுரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஆஞ்சநேயர் சிவபூஜை செய்த இடத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டு ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.