அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பச்சூர் - 631203, திருவள்ளூர் .
Arulmigu Vaseeswaraswamy Temple, Tirpachoor - 631203, Tiruvallur District [TM001522]
×
Temple History
தல பெருமை
இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை.
சுவாமி சுயம்பு மூர்த்தி, சோழர்கள் வழிபட்ட தலம்
வேடர்கள் வழிப்பட்ட தலம்
மஹா விஷ்ணு வழிப்பட்ட தலம்
கேது அதிபதி வினாயகர் கேது தலம்
ஆதிசங்கரர் வழிபட்ட தலம்
அம்பாள் வழிபட்ட தலம்
சூரிய, சந்திரன் வழிபட்ட தலம்
பசு வழிபட்ட தலம் ஆகும்.
கரிகால சோழன் பேரரசர் படைகலோடு மூங்கில் காட்டில் தங்கி இருந்தபோது அவரது கனவில் தெரிந்தது. அதனால் மூங்கில் காட்டை சுத்தம் செய்யும்போது காட்டுவாசி வேடர்கள் அரசர் தேடுவதை என்னவென்று கேட்டார்கள் அப்போது ஒரு மூங்கில் காட்டை காண்பித்து இதர்க்குள் தினமும் பசு உள்ளே சென்று வருகிறது என்ற அரசருக்கு அடையாளம்...இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை.
சுவாமி சுயம்பு மூர்த்தி, சோழர்கள் வழிபட்ட தலம்
வேடர்கள் வழிப்பட்ட தலம்
மஹா விஷ்ணு வழிப்பட்ட தலம்
கேது அதிபதி வினாயகர் கேது தலம்
ஆதிசங்கரர் வழிபட்ட தலம்
அம்பாள் வழிபட்ட தலம்
சூரிய, சந்திரன் வழிபட்ட தலம்
பசு வழிபட்ட தலம் ஆகும்.
கரிகால சோழன் பேரரசர் படைகலோடு மூங்கில் காட்டில் தங்கி இருந்தபோது அவரது கனவில் தெரிந்தது. அதனால் மூங்கில் காட்டை சுத்தம் செய்யும்போது காட்டுவாசி வேடர்கள் அரசர் தேடுவதை என்னவென்று கேட்டார்கள் அப்போது ஒரு மூங்கில் காட்டை காண்பித்து இதர்க்குள் தினமும் பசு உள்ளே சென்று வருகிறது என்ற அரசருக்கு அடையாளம் காண்பித்தனர். உடனே மூங்கில் சுத்தம் செய்யும்போது மூங்கில் வெட்டும் கருவி சுவாமியின் சிரசு மேல்பட்டது. அதனால் சுவாமி வாசீஸ்வர சுவாமி என கரிகாலசோழன் பெயர் சூட்டினார். சைவ சமயர்கள் பாசூர் நாதர் என பெயர் சூட்டப்பட்டது.
சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.