தல பெருமை
சக்தி பீடங்களுக்கு இணையாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பெற்றது. சக்திமேடு என அழைக்கப்படும் பகுதியில், அரக்கோணம் - ரேணிகுண்டா இரண்டாவது இரயில் பாதைபோடும் பணி நடைபெற்ற பொழுது பூமியில் இருந்து அன்னையின் கம்பீர உருவம் சிதைவின்றி மீட்கப்பட்டது. எட்டுக் கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, சக்தி, கேடயம், திரிசூலம், ஜவ்வ கபாலமாலை ஆகியவற்றைத் தரித்து மகிடாசூரனை தனது திரிசூலத்தால் குத்தி கோபப் பார்வையை நீக்கி அருட் பார்வையால் உலகை நோக்கும் திருக்கோலம் காண்போரை வியப்படைய வைக்கும் தன்மையது.