Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302, Tiruvallur District [TM001528]
×
Temple History
தல பெருமை
நாகேஸ்வரர், நாகவள்ளி, நாகபூண்டி நாகங்கள் பூஜித்த தலம். சுவாமி சுயம்பு லிங்கம், அம்பாள் கிழக்கு நோக்கி இருக்கக்கூடிய தலம். ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நான்காம் நாள் நாக வாகனம் அன்று மூலவருக்கு நாகங்கள் பூஜை செய்வதாக ஐதீகம். நான்காம் நாள் நாக வாகனம் திருவீதி உலா நடைபெறும் போது கோயில் நடை சாத்தப்பட்டு திருக்கோயில் முன்பாக 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி புற்று சுற்றும் நிகழ்ச்சி நடைபெறும் சமயத்தில் கோயில் உள்ளே நாகங்கள் சுவாமிக்கு பூஜை செய்வதாக ஐதீகமாக இன்று வரை உள்ளது. சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது ஒரு வட்டில் பால் வைக்கப்படும். அதை நாகங்கள் அருந்துவதாக ஐதீகம் இன்று வரை உள்ளது. ...நாகேஸ்வரர், நாகவள்ளி, நாகபூண்டி நாகங்கள் பூஜித்த தலம். சுவாமி சுயம்பு லிங்கம், அம்பாள் கிழக்கு நோக்கி இருக்கக்கூடிய தலம். ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நான்காம் நாள் நாக வாகனம் அன்று மூலவருக்கு நாகங்கள் பூஜை செய்வதாக ஐதீகம். நான்காம் நாள் நாக வாகனம் திருவீதி உலா நடைபெறும் போது கோயில் நடை சாத்தப்பட்டு திருக்கோயில் முன்பாக 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி புற்று சுற்றும் நிகழ்ச்சி நடைபெறும் சமயத்தில் கோயில் உள்ளே நாகங்கள் சுவாமிக்கு பூஜை செய்வதாக ஐதீகமாக இன்று வரை உள்ளது. சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது ஒரு வட்டில் பால் வைக்கப்படும். அதை நாகங்கள் அருந்துவதாக ஐதீகம் இன்று வரை உள்ளது. இன்றும் ஆலயத்திலும் மற்றும் கருவரையிலும் நாகங்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இத்தலத்தில் பால் அபிஷேகம் செய்தால் சர்ப்ப தோஷம் நிவர்த்தி ஆகும்.
சுவாமி அபிஷேகத்திற்கு பக்தர்கள் பால் தருவது வழக்கத்தில் உள்ளது. சுவாமியின் பால் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
குறிப்பு
நான்கு யுகங்களாக சுயம்பு மூர்த்தியாக இருக்கும் நாகேஸ்வரருக்கு நாகங்கள் பூஜை செய்த விவரம்
1கிருத யுகம் முதல் யுகம் - கால கண்டன், ஆதி சேஷன் பூஜித்த ஸ்தலம்
2திரேதா யுகம் இரண்டாம் யுகம் - வாசுகி பூஜித்த ஸ்தலம்
3துவாபர யுகம் மூன்றாம் யுகம் - அஷ்ட நாகங்கள் பூஜித்த ஸ்தலம்
4கலி யுகம் நான்காம் யுகம் - இரு முனிவர்கள் நாகங்களாக பூஜித்த ஸ்தலம்