Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், வங்கனூர் - 631303, திருவள்ளூர் .
Arulmigu Lakshminarayana Perumal Temple, Vanganoor - 631303, Tiruvallur District [TM001531]
×
Temple History

தல பெருமை

1. திருத்தணியிலிருந்து சித்தூர், சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் 22 கி. மீ. தொலைவில், இரண்டு கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது வங்கனூர் என்ற மிகப் புராதனத் திருத்தலம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 1100 ஆண்டுகள் புராதனமானது. 2. இத்திருக்கோயிலில், ஸ்ரீ மகாலட்சுமியுடன் சேர்ந்து ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமான் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீ கனகவல்லி என்பதாகும். இவர்கள் தவிர, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயண சுவாமி, ஸ்ரீசக்ரதாழ்வார், ஸ்ரீயோக ஆஞ்சிநேய சுவாமி, அஷ்ட லட்சுமி சன்னதிகள் ஆகியன உள்ளன. 3. இக்கோயில் அமைந்திருக்கும் பகுதி, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் ஆட்சிக் காலத்தில் ரண...