திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வங்கனூர் கிராமத்தில் அருள்மிகு இலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கி. பி. 1100-ஆம் ஆண்டு பல்லவர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இத்திருக்கோயில் கடிகாசலஷேத்திரம் போன்றே இங்கே (சின்னமலையில் உள்ளவாறு) ஸ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி 4 திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அருள்புரிகிறார்.