அருள்மிகு தெய்வநாகேஸ்வரர் திருக்கோயில், இளமைன்கோட்டூர் - 631553, காஞ்சிபுரம் .
Arulmigu Thaivanageshwarar Temple, Ilamainkottur - 631553, Kancheepuram District [TM001532]
×
Temple History
தல பெருமை
1 திருஞானசம்பந்தர் திருவல்லம் பாடிப்பரவி, திருவிற்கோலம் கூவம் திருத்தலத்தைப் பாட எண்ணி இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கின் முன்பாக சிறு குழந்தை அப்படியும், இப்படியுமாக நடந்து கொண்டிருந்தது. குழந்தையை ஓரமாக அமரவைத்து விட்டு தொடர்ந்து பல்லக்கில் சென்று கொண்டிருந்தார் சம்பந்தர்.
பிறகு சற்று தூரம் சென்ற பிறகு முதியவர் ஒருவர் பல்லக்கின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பெரியவரைப் பார்த்து தொண்டர் குழாம் சற்று தள்ளிப்போகச் சொல்லிவிட்டு பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். பிறகு ஒரு பசுவானது பல்லக்கை முட்டிச் சென்றது. பசு தலையை ஆட்டிவிட்டு வலது பக்கம் ஓடியது.
ஞானசம்பந்தர் பல்லக்கை பசுவின் பின் செல்லச் செய்தார். பசு இக்கோயிலை நோக்கிச்...1 திருஞானசம்பந்தர் திருவல்லம் பாடிப்பரவி, திருவிற்கோலம் கூவம் திருத்தலத்தைப் பாட எண்ணி இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கின் முன்பாக சிறு குழந்தை அப்படியும், இப்படியுமாக நடந்து கொண்டிருந்தது. குழந்தையை ஓரமாக அமரவைத்து விட்டு தொடர்ந்து பல்லக்கில் சென்று கொண்டிருந்தார் சம்பந்தர்.
பிறகு சற்று தூரம் சென்ற பிறகு முதியவர் ஒருவர் பல்லக்கின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பெரியவரைப் பார்த்து தொண்டர் குழாம் சற்று தள்ளிப்போகச் சொல்லிவிட்டு பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். பிறகு ஒரு பசுவானது பல்லக்கை முட்டிச் சென்றது. பசு தலையை ஆட்டிவிட்டு வலது பக்கம் ஓடியது.
ஞானசம்பந்தர் பல்லக்கை பசுவின் பின் செல்லச் செய்தார். பசு இக்கோயிலை நோக்கிச் சென்றது. பின் தொடர்ந்தனர். பசு கோயிலின் உள் நுழைந்தது. பசு மறைந்தது.
அப்போது இளமையின்கோட்டூர் பெருமான் ஞானக்குழந்தையே உள்ளன. எம்மை இங்கு பாட அழைத்து வந்தது யாம்தான். குழந்தையாகவும் பாலன் வயோதிகராகவும் விருத்தன் பசுவாகவும் உன்னை இடைமறிந்ததும் நான்தான் இன்தமிழால் எமைப்பாடுக என்று கூறியருளினார். ஞானசம்பந்தர் மலையரினார் பருப்பதம் எனத்துவங்கி பதிகம் பாடினார். மூன்றாம் பாடலில் பாலனாம், விருத்தனாம், சுபதிதானாம் என்று பாடிப் பரவினார்.
2 தட்சனின் சாபம் தீர இத்தலத்துப் பெருமானை சந்திரன் வழிபட்டான். மூன்றாம் பிறையன்று சந்திரனை சிவபெருமான் தலையில் சூடிக்கொண்டார். எனவே, இத்தலத்து இறைவன் சந்திரசேகரர் எனப் போற்றப்படுகிறார்.
தேவலோகத்து அரம்பை ரம்பை இத்தலத்து பெருமானை வழிபட்டதால் இவர் அரம்பேஸ்வரர் என போற்றப்படுகிறார்.