Screen Reader Access     A-AA+
ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் உடனுறை திருநாகேஸ்வரர் கோயில், வளர்புரம் - 631003, ராணிப்பேட்டை .
Arulmigu Thirunageshwarar Temple, Valarpuram - 631003, Ranipet District [TM001533]
×
Temple History

தல பெருமை

இந்த புனிதமான க்ஷேத்திரம் பல நூற்றாண்டுகளாகக் காணப்பெறாது மலையளவாக விரிந்து உயர்ந்த கள்ளிக்காடுகளாலும், கொடிய விஷமுட்களாளும் மறைந்திருந்த சிவலிங்கப் பெருமாள் நம்மை வெளிப்படக் கண்டு வழிபாடு செய்துய்க என்று 1917-ஆம் ஆண்டு க்ஷேத்திரத்திலேயே வாழ்ந்த மத்தால சுப்பிரமணி சாஸ்திரிகள் நெற்களத்தில் படுத்திருந்த சமயம் சிவபெருமான் பிராமணர் வேடத்தில் வந்து அவரை தட்டி எழுப்பி நம்மை வழிபாடு செய்துள்ன என்று கூறினார். அவர் அதை பொருட்படுத்தாத நிலையில் மீண்டும் இருபது நாள் கழித்து அதே நெற்களத்தில் நெற்கட்டுகளுக்கு காவல் படுத்திருக்கும் பொழுது இரண்டாவது முறையாக சிவபெருமான் அதே பிராமணர் வேடத்தில் வந்து வெள்ளி பிரம்பினால் தட்டி எழுப்பி, நான் சொல்லியது பொருட்படுத்தவில்லையே ஏன்? என்று கூறி, தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று...