தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அண்டக்குடி கிராமத்தில் , பாபநாசம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அருள்மிகு சக்தீஸ்வரர் (சிவபெருமான்) அண்டம் முழுவதும் விரவி இருக்கின்ற தன் சக்தி சொரூபத்தை கயிலை வாசனான சிவபெருமான், அண்டகுடி என்கிற கிராமத்தில் நிறுத்தி வைத்தார். ஆகையால் இத்திருத்தல் இறைவனுக்கு சக்தீஸ்வரர் எனவும் கிராமத்திற்கு அண்டகுடி எனவும் பெயர் விளங்கப் பெற்றது. இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் இரண்டு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.