அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கங்கையம்மன் திருக்கோயில், சூளைமேடு, சென்னை - 600094, சென்னை .
Arulmigu Prasanna Venkatesa Perumal Arul Sakthi Vinayagar Gangaiamman Temple, Choolaimedu, Chennai - 600094, Chennai District [TM000159]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலில்கள் சென்னை -94, சூளைமேட்டில், 20, சூளைமெடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. அருள்மிகு கங்கையம்மன், அருள்சக்தி விநாயகர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அருகருகே ஓரிடத்தில் அமைந்துள்ளன. பஜனைமடமும் அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தை அடுத்து அமைந்துள்ளது. நுங்கம்பாக்கம்
இரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வடகிழக்கில் உள்ளது.
அருள் சக்தி விநாயகர் ஆலயமும், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் ஓரே வளாகத்துள் அமைந்து விளங்கும் காட்சி, சைவருக்கும் வைணவருக்கும் சிந்தை மகிழும் வண்ணம் உள்ளது. இவ்விருத்திருகோயில்களும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இவற்றிற்கு எதிரே உள்ள கங்கையம்மன் ஆலயம் கிழக்கு திசைநோக்கி உள்ளது. கங்கையம்மன் ஆலய கர்ப்பகிரத்தின் உள்ளே வேப்பமரம் ஓன்று உள்ளது. நூறாண்டுக்க்கும் மேற்ப்பட்ட இந்நுண்...இத்திருக்கோயிலில்கள் சென்னை -94, சூளைமேட்டில், 20, சூளைமெடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. அருள்மிகு கங்கையம்மன், அருள்சக்தி விநாயகர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அருகருகே ஓரிடத்தில் அமைந்துள்ளன. பஜனைமடமும் அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தை அடுத்து அமைந்துள்ளது. நுங்கம்பாக்கம்
இரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வடகிழக்கில் உள்ளது.
அருள் சக்தி விநாயகர் ஆலயமும், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் ஓரே வளாகத்துள் அமைந்து விளங்கும் காட்சி, சைவருக்கும் வைணவருக்கும் சிந்தை மகிழும் வண்ணம் உள்ளது. இவ்விருத்திருகோயில்களும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இவற்றிற்கு எதிரே உள்ள கங்கையம்மன் ஆலயம் கிழக்கு திசைநோக்கி உள்ளது. கங்கையம்மன் ஆலய கர்ப்பகிரத்தின் உள்ளே வேப்பமரம் ஓன்று உள்ளது. நூறாண்டுக்க்கும் மேற்ப்பட்ட இந்நுண் வேம்பு மரத்தடியில் ஸ்ரீ கங்கையம்மன் மூலவர் மூர்த்தி அமர்ந்திருக்கும் காட்சி, அச்சீரிய வேம்பு உலகு புரக்கும் அன்னை குடைபிடித்தாற் போன்று எழில் மேவி நிற்கின்றது.வானளாவி நிற்கும் இந்த வேம்பு அம்மனை வழிபட ஆலயம் வரும் பக்த்தர்களுக்கு தன் மூலிகைச் சக்தியை காற்றில் கலந்து விசுவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை வழங்குகின்றது.அம்மை, சிரங்கு, சொறி போன்ற தோல்நோய்களை நீக்குகிறது.நோய்தடுப்புச் சக்தியை வழங்கிறது. வேம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியும் ஆகும்.(இவ்வாறு ஆலயத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு தலவிருட்சத்திற்கும் ஒவ்வொருவித மருத்துவ பயன் உண்டு. இதனை அறிந்தே ஆலயம் அமைத்த நம் மூன்னோர் ஆலயங்களில் தலவிருட்சம் வளர்பதை விதியென வகுத்தனர் போலும்.)
திருக்கோயி தோற்றம் மற்றும் பழைமை விளம்பல்
புனிதமான இந்த இடத்தில் ஆரம்ப காலத்தில் கங்கையம்மன் ஆலயம் மட்டும் இருந்தது. இது சுமார் 150 ஆண்டுகால கோயில் என கூறப்படுகிறது. இவ்விடம் முன்பு புலியூர் என வழங்கி வந்தது. அரசாவணங்களிலும் அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் கங்கையம்மனுக்கு சொந்தமான திருக்குளம் ஒன்று இருந்தது. பூர்வீகத்தில் இந்த குளக்கரையின்ஒரு புறத்தில் சாதாரணமாக விநாயகர் சிலை ஒன்றை வைத்து மக்கள் வழிபட்டு வரலாயினர். நாளடைவில் அவ்விடத்தில் ஒரு அரசமரமும் நட்டுவிக்கப்பட்டது. அன்பர் தம் முயற்சியால் சிறு கீற்றுக் கொட்டகையும் கட்டுவிக்கப்பட்டது. ஆலயத்தோற்றம் உருவானது. பக்தர்கள் கூட்டம் வரலானது.