இத்திருக்கோயிலில்கள் சென்னை -94, சூளைமேட்டில், 20, சூளைமெடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. அருள்மிகு கங்கையம்மன், அருள்சக்தி விநாயகர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அருகருகே ஓரிடத்தில் அமைந்துள்ளன. பஜனைமடமும் அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தை அடுத்து அமைந்துள்ளது. நுங்கம்பாக்கம் இரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வடகிழக்கில் உள்ளது. அருள் சக்தி விநாயகர் ஆலயமும், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் ஓரே வளாகத்துள் அமைந்து விளங்கும் காட்சி, சைவருக்கும் வைணவருக்கும் சிந்தை மகிழும் வண்ணம் உள்ளது. இவ்விருத்திருகோயில்களும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இவற்றிற்கு எதிரே உள்ள கங்கையம்மன் ஆலயம் கிழக்கு திசைநோக்கி உள்ளது. கங்கையம்மன் ஆலய கர்ப்பகிரத்தின் உள்ளே வேப்பமரம் ஓன்று உள்ளது. நூறாண்டுக்க்கும் மேற்ப்பட்ட இந்நுண் வேம்பு...