Screen Reader Access     A-AA+
அருள்மிகு செங்காளம்மன் திருக்கோயில், செம்புலிவரம், செம்புலிவரம் - 600067, திருவள்ளூர் .
Arulmigu Sengalamman Temple, Sembulivaram - 600067, Tiruvallur District [TM001591]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயில் செம்புலிவனம் அதாவது செம்புலிகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. அத்தகைய காலத்தில் அவ்வழி செல்லும் மக்களை பாதுகாக்கும் தேவியாக அம்பாள் அமர்ந்து காவல் காத்து கொண்டிருக்கிறாள். செம்புலிவனம் தற்போது மருவி செம்புலிவரமாக மாறியுள்ளது. அவ்வழி செல்லும் மக்கள் தன்னை வணங்கி சென்றால் பாதுகாப்புடன் செல்வது மட்டுமில்லாமல் தாங்கள் செல்லும் காரியமும் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோயில் திருமணத்தடைஈங்கவும் மற்றும் குழந்தைபேறு பெறுவதற்கு முக்கிய ஸ்தலமாக உள்ளது.