Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சின்னம்பேடு - 601206, திருவள்ளூர் .
Arulmigu Balasubramaniya Swamy Temple, Chinnambedu - 601206, Tiruvallur District [TM001596]
×
Temple History

தல பெருமை

அசுவமேத யாகம் செய்ய விருப்பங் கொண்ட இராமபிரான் யாகப் பசுவாக அனுப்பப்படவேண்டிய குதிரையை ஏவிவிட்ட அது வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் வர அதை அங்கு வளர்த்து வந்த இராமபிரானின் பிள்ளைகளான இலவனும் குசனும் கட்டி போட்டு விட்டனர். இச்செய்தி அறிந்த இராமன் இலக்குவனை அனுப்ப அவனால் குதிரையை சிறுவரிடமிருந்து மீட்டு போக முடியாமல் போகவே இராமனே நேரில் வந்து சிறுவர்களை எதிர்கொண்டு போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றான் என்பது இராமாயண செய்தியாகும். இவ்வாறு இராமனிடம் லவனும்.குசனும் சண்டை செய்த இடமே இச்சிறுவாபுரி என்பது வரலாறு ஆகும். இந்த வரலாற்று செய்தியை, சிறுவராகிய இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை இராமன் உடன் எதிர்த்து ஜெயமாதான நகர்...