திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டதில் உள்ள சிறுவாபுரி புராண காலத்தில் இங்கு ஸ்ரீ இராமபிரானின் புதல்வர்களாகிய லவன் குசன் இருவரும் இராமபிரானின் சேனைகளுடன் அம்பு தொடுத்து போர் புரிந்ததால் சிறுவரம்பேடு (சிறுவர் அம்பு எடு) என்று இந்த தலத்திற்குத் திருப்பெயர் வழங்கப்பட்டு, தற்போது சின்னம்பேடு சிறுவாபுரி ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்தகவி அருணகிரியார் இங்குள்ள பெருமான் மீது நான்கு திருப்புகழ் பாடியுள்ளார். இந்த திருப்புகழைப்பாடி பெருமானை வழிபடின் இவ்லோகத்தின் சொந்த வீட்டில் குடியேறலாம் என்பது ஞானியர் வாக்கு பிரம்மனை போன்று படைப்புகோல மூர்த்தியாய் இந்த திருக்கோயிலின் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்காட்சியருளுகின்றார்
06:30 AM IST - 12:00 PM IST | |
04:30 PM IST - 08:00 PM IST | |
செவ்வாய் கிழமை மட்டும் அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்.ஞாயிற்று கிழமைக மற்றும் கிருத்திகை தினங்களில் அதிகாலை 6.30 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்.இதர நாட்களில் காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 வரையிலும் மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் |