Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிடாரி உத்தனாட்சியம்ம மங்களேஸ்வரர் பாலவிநாயகர் திருக்கோயிக, அரும்பாக்கம், சென்னை - 600106, சென்னை .
Arulmigu Pidari Uthanachi Amman Mangaleswarar Balavinayagar Temples, Arumbakkam, Chennai - 600106, Chennai District [TM000165]
×
Temple History

புராண பின்புலம்

சென்னை மாவட்டம், அமைந்தகரை வட்டம், அரும்பாக்கம் கிராமம், அருள்மிகு பிடாரி உத்தனாட்சியம்மன் மங்களேஸ்வரர் பாலவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு பிடாரி உத்தனாட்சியம்மன் திருக்கோயில் அரும்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கிராம தேவதையாக அமைந்துள்ளது. அப்பகுதி மக்களால் ஆடி மாதம் மிகவும் சிறப்பான முறையில் திருவிழாவாக அப்பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்படி திருக்கோயில் அப்பகுதி மக்களால் 50 ஆண்டுகளுக்கு முன் செங்கல் மற்றும் சிமெண்டுகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேற்படி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய தினங்கள் சிற்றபாக கொண்டாடப்பட்டு வருகிறது.