சென்னை மாவட்டம், அம்மனிகரை தாலுக்கா அரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு பிடாரி உத்தநாட்டி அம்மன் மங்களேஸ்வரர் பாலவிநாயகர் கோயில் உள்ளது. அரும்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்களின் கிராம தெய்வமாக அருள்மிகு பிடாரி உத்தநாட்டி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதம் அப்பகுதி மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேற்கண்ட கோவில், 50 ஆண்டுகளுக்கு முன், செங்கல் மற்றும் சிமென்ட் கொண்டு, அப்பகுதி மக்களால் கட்டப்பட்டது. மேற்கண்ட கோவிலில் ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய நாட்கள் கொண்டாடப்படுகிறது.