தல வரலாறு
ஓரு தாய் தனது குழந்தைக்கு கண் தெரிவதற்காக வேண்டி கொள்கிறாள் அக்குழந்தைக்கு கண்தெரிய தன் கண்ணைஎடுக்க முற்படும்போது சுவாமி தடுத்து ஆட்கொண்டார். அதனால் இவ்வூருக்கு கண்கொடுத்தவனிதை என்று பெயர் வந்தது மீண்டும் மறுவி கண்கொடுத்தவனிதம் என்று ஆயிற்று.
தல பெருமை

(கண் நோய் நிவர்த்திஸ்தலம்) திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோவிலில் பல வருடங்களாக அமுதுபடையல் விழா(சிறுத்தொண்ட நாயனார்வரலாறு ) மிக சிறப்பாக நடைபெறும்.நயனம் என்றால் கண் என்று பொருள். வரதீஸ்வரர் என்பதற்கு கொடுப்பவர் என்று பொருள்.இதனால் சுவாமி பெயர் நயனவரதீஸ்வரர் (கண் கொடுப்பவர்) ஊர் பெயர் கண்கொடுத்தவனிதம்