அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Irawatheshwarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001661]
×
Temple History
தல வரலாறு
காஞ்சிபுரம் நகர், அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (ஐராவதேசம்) என்றழைக்கப்படும் காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும், மேலும், பல்லவர்கள் கட்டிய கோவிலாக கருதப்படும். இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
இத்தல இவ்விறைவனை ஐராவதம் வழிபட்டு, இந்திரனைத் தாங்குகின்ற வரம் பெற்றது, தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.
ஐராவதேசம் எனும் இது, நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதீஸ்வரர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தி என்ற...காஞ்சிபுரம் நகர், அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (ஐராவதேசம்) என்றழைக்கப்படும் காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும், மேலும், பல்லவர்கள் கட்டிய கோவிலாக கருதப்படும். இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
இத்தல இவ்விறைவனை ஐராவதம் வழிபட்டு, இந்திரனைத் தாங்குகின்ற வரம் பெற்றது, தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.
ஐராவதேசம் எனும் இது, நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதீஸ்வரர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தி என்ற நிலைமையையும் பெற்றது, இத்தலம் இராஜவீதியும் நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் மேற்கு நோக்கியவாறு விளங்குகின்றது.
இத்திருக்கோயில் சிவனை யானை வழிபட்ட ஸ்தலம் எனவே ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறது