காஞ்சிபுரம் மாநகரம், அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ள சிவஸ்தலமாகும். இத்திருக்கோயில் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. 8ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்திரன் தன் வெள்ளை யானையுடன் வழிபட்ட ஸ்தலம். அதனால் ஐராவதீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். கருவறை அர்த்தமண்டபத்துடன் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சுவர் முழுவதும் தொன்மை மிக்க புராதன சிற்பங்களில் பல்வேறு தேவர்கள் சிவபெருமானை வணங்கும் வடிவினை கொண்டுள்ளது சிவராத்திரி வழிபாடு சிறப்பானது