தல வரலாறு
காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் என்பது காயாரோகணம் என வழங்கப்படுகிறது காயம் ஆரோகணம் காயாரோகணம் . காயம் என்றால் உடம்பு . ஆரோகணம் என்றால் ஏற்றிக் கொள்ளுதல். எல்லா உயிர்களும் உலகமும் அழிகின்ற பேருழிக் காலத்தில் என்றும் அழியாதவனாகிய சிவபெருமான். திருமால் பிரம்மன் ஆகியோரது சரீரத்தை ஓடுக்கி தன் தோள்மீது ஏற்றி கொண்டுகாயா ஆரோகண இறைவனாக நடனம் ஆடுகின்றான். திருமாலும் பிரம்மனும் பற்றி காஞ்சிபுராணத்தில் பாடப்பட்டுள்ளது...