Screen Reader Access     A-AA+
அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Panamudeshwarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001670]
×
Temple History

தல வரலாறு

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே கீரை மண்டபம் என்ற பகுதியில் அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் கோபுரம், மூலவர் சன்னதி, விநாயகர், முருகர் சன்னதி ஆகியவை கிழக்கு பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியனார், வைரவர், சித்தீஸ்வரர், பெருமாள் மற்றும் நவகிரகங்கள் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலின் மூலவர் சன்னதியில் பணாமுடீஸ்வரர் காட்சி தருகின்றார். ஒரு சமயம் கருடன் வலுபெற்று பாம்புகளை துன்புறுத்தி வந்தாராம். இதனால் வருத்தமற்ற பாம்புகளும் இந்த பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்துள்ளன. தங்களுக்கு கருடனால் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்றும், தங்களை காக்க வேண்டும் என வருத்தப்பட்டு சிவலிங்கத்தை பூஜை செய்தும் வந்துள்ளன. நாகங்களின் பூஜையால் மனம் உருகிய ஈசனோ...