வேல்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆட்டுப்புத்துார் கிராமம் - 631561, காஞ்சிபுரம் .
Arulmigu Velkottam Subramaniyaswamy Temple, Attupputhur - 631561, Kancheepuram District [TM001677]
×
Temple History
தல வரலாறு
நகரேஷி காஞ்சியில் இருந்து கிழக்கு திசையில் பெங்களுரூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கிராமம் ஆட்டுப்புத்தூர். இக்கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் வேல்கோட்டம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மேற்கு நோக்கிய கோயில் ஆகும். மூலவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். உள்ளே காசிவிஸ்வநாதர் சன்னதி, மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியும் அமைய பெற்றுள்ளது. கொடிமரத்துடன் கூடிய அழகிய சுற்று பிரகாரம் அமைந்துள்ளது.
மேற்கு நோக்கிய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் மேலும் ஓர் சிறப்பு. இங்கு முருகனுக்கு வாகனமாக அவர் தேவசேனாதிபதியாக இருந்ததற்காக அவருக்கு பரிசாக கிடைத்த ஐராவதம் ஆகிய யானை அமைந்துள்ளது. ...நகரேஷி காஞ்சியில் இருந்து கிழக்கு திசையில் பெங்களுரூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கிராமம் ஆட்டுப்புத்தூர். இக்கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் வேல்கோட்டம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மேற்கு நோக்கிய கோயில் ஆகும். மூலவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். உள்ளே காசிவிஸ்வநாதர் சன்னதி, மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியும் அமைய பெற்றுள்ளது. கொடிமரத்துடன் கூடிய அழகிய சுற்று பிரகாரம் அமைந்துள்ளது.
மேற்கு நோக்கிய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் மேலும் ஓர் சிறப்பு. இங்கு முருகனுக்கு வாகனமாக அவர் தேவசேனாதிபதியாக இருந்ததற்காக அவருக்கு பரிசாக கிடைத்த ஐராவதம் ஆகிய யானை அமைந்துள்ளது. மேலும் சிறப்பு வாய்ந்த ஒன்று மேற்கு நோக்கிய முருகன் கோயில்களில் தம்கதியராய் காட்சியளிக்கும் சிறப்பும் இத்திருக்கோயிலுக்கு உண்டு.
இத்திருக்கோயிலில் தைக்கிருத்திகை, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை மற்றும் கந்தசஷ்டி விழா போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.