நகரேஷி காஞ்சியில் இருந்து கிழக்கு திசையில் பெங்களுரூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கிராமம் ஆட்டுப்புத்தூர். இக்கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் வேல்கோட்டம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மேற்கு நோக்கிய கோயில் ஆகும்.