அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம் - 603109, செங்கல்பட்டு .
Arulmigu Vedagireeswarar Temple, Thirukkalukkundram - 603109, Chengalpattu District [TM001688]
×
Temple History
தல பெருமை
இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றும், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது.இத்திருக்கோயில் 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும்.
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத்...இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றும், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது.இத்திருக்கோயில் 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும்.
கழுகு முனிவர்கள் வரலாறு - கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க மறுத்த முனிவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை கழுகு வடிவமாக மாற சபித்தார். முனிவர்கள் இருவரும் தமது தவறை உணர்ந்து, தங்களை மன்னித்தருள இறைவனிடம் வேண்டினர். இறைவன் நீங்கள் காசிப முனிவரிடத்தில் இரு கழுகுகளாப் பிறந்து, திருக்கழுக்குன்றம் மலைமீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரரை தினமும் வழிபடுங்கள் கலியுக முடிவில் சுய உருவம் பெற்று முக்தி அடைவீர்கள் என சாப விமோசனத்திற்கு வழியும் கூறி அருளினார். அதற்கேற்ப இன்றளவும் தினமும் இரு கழுகுகளும் ( தற்போது கடந்த 20 ஆண்டுகளாக கழுகுகள் உணவருந்துவதில்லை) திருமலை மேல் பறந்து இறைவனை வழிபட்டு உணவருந்திச் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
சங்குதீர்த்தம் - மார்க்கண்டேயர் என்கிற மகரிஷி அனைத்து சிவ தலங்களை வழிபாடு நடத்திவிட்டு, திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரரை வழிபாடு செய்ய எவ்விதமான பாத்திரமும் இல்லாத காரணத்தினால் தீர்த்த குளத்தில் தவம் மேற்கொண்டபோது, தீர்த்த குளத்தில் இறைவன் சங்கு ஒன்று பிறக்க செய்தார். அது முதல் இத்தீர்த்த குளம் சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தீர்த்த குளத்தில் புனித சங்கு பிறப்பது இன்றுவரை நிகழ்ந்து வருகிறது. (கடந்த 1.9.2011-அன்று புனித சங்கு பிறந்தது)
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் - இத்திருக்கோயில் வீற்றிருக்கும் அம்மன் அஷ்ட கந்தம் என்கிற எட்டு விதமான மூலிகை திருமேனி சாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிற்கு மூன்று நாட்கள் மட்டும் முழு அபிஷேகம் நடைபெறும் ( ஆடி உத்திரம், நவராத்திரி தசமி, பங்குனி உத்திரம் - ஆகிய மூன்று தினங்கள்)
பெளர்ணமி கிரிவலம் - திருமலை நான்கு வேதமே மலையாக உள்ளதாலும், சஞ்சீவிக் காற்று வீசுவதால் இம்மலையை சுற்றிவந்தால் தீராத நோய்கள் யாவும் தீரும். மகப்பேறுகள் இல்லாதவர்க்கு மகப்பேறு உண்டாகும் மேலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று பல்லாயிரணக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் (பௌர்ணமி கிரிவலம் - வாழ்வில் வளம் சேர்க்கும்) வருகிறார்கள்.
தல விருட்சம் - இத்திருத்தலத்தின் தல விருட்சம் கதலி (வாழை) ஆகும்.
வரலாற்றுச் செய்தி : திருக்கழுக்குன்றம் மலைமீது இரண்டு பல்லவர் கால கோயிலும், தாழக்கோயிலில் உள்ள ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலும் பல்லவர்கால கோயிலாகும். இக்கோயிலிருந்து 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ஒருகல் மண்டபம் என வழங்கப்படும் பல்லவர் குடைவரைக்கோயிலில் வாதாபிகொண்ட நரசிங்க கோத்தரையர் எனக்குறிப்பிடப்படும் கல்வெட்டு உள்ளது. இக்குகையில் இங்குவருகைபுரிந்த டச்சுக்காரர்களின் பெயர்களும் காணப்படுகின்றன. மலைஉச்சியில் வேதகிரீநாதர் கோயில் உள்ளது சாத்தன் மகிபாலன் என்பவன் கோயில் முழுவதும் திருப்பணி செய்துள்ளான் என்பதை அறிகிறோம். தாழக்கோயிலான பக்தவத்சலர் கோயில் வளாகத்தில் தூங்கானை மாட வடிவில் உள்ள (ஆபணக்கொட்டடி) கோயிலில் 22 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் கோயில் மாறவர்மன் சுந்தபாண்டின் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
திருக்கழுக்குன்றக்கோவை, திருக்கழுக்குன்றக்கலம்பகம் வடமொழியில் உள்ள தலபுராணம், கழுகாகலசதகம் போன்ற இலக்கியங்களும் இத்தலத்தின் சிறப்பை எடுத்துக்கூறுகின்றன.