இத்தலம் தொண்டை மண்டலத்திலேயே மிகவும் பிரசித்திப்பெற்றம், சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி மற்றும் அருளாளர்களாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். வேதங்கள் நான்கும் மலையுருவாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. கழுகு முனிவர்கள் வரலாறு - நான்காவது கலியுக கால துவக்கத்தில பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க மறுத்த முனிவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை கழுகு வடிவமாக மாற சபித்தார். முனிவர்கள் இருவரும் தமது...