Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பூவிருந்தவல்லி - 600056, திருவள்ளூர் .
Arulmigu Thirukachi Nambigal and Varadharaja Perumal Temple, Poonamallee - 600056, Tiruvallur District [TM001708]
×
Temple History

தல பெருமை

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் கி.பி.1009-ம் சௌம்ய வருடம் மாசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ வீரராகவச் செட்டியாருக்கும் ஸ்ரீமதி கமலயாருக்கும் நான்காவது திருக்குமரனாக அவதரித்தார். ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் தனது நந்தவனத்தில் மல்லி செடிகள் வைத்து, மலர் மாலை தொடுத்து தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு மாலை சாற்றி, ஆலவட்டம் கைங்கர்யம் செய்துவந்தார். ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் வயது மூப்பின் காரணமாக காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய இயலாத போது சூரிய உதய காலத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீ நம்பிகளுக்கு காட்சியளித்து அருள்புரிந்தார். மேலும் இத்திருத்தலத்தில் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் திருப்பெயரிலேயே இவ்வூர் பூவிருந்தவல்லி என அழைக்கப்படுகிறது.