தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு மேற்கே 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூவிருந்தவல்லி என்னும் புண்ணியத் திருத்தலம். இத்திருத்தலம் ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதருக்கு புஷ்ப கைங்கர்யம் விடாது செய்தவருமான அருள் நிறை ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் திரு அவதார ஸ்தலமாகும். திருக்கோயிலின் சிறப்பு - பூவிருந்தவல்லி என்னும் புண்ணிய திருத்தலத்தில் திருக்கச்சி நம்பிகளுக்கு ஸ்ரீ ரங்கநாதனும், திருமலை வேங்கடவனும், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் எழுந்தருளிய திருத்தலமாகும். பெருமாளின் திருப்பெயர் : அருள்மிகு வரதராஜப் பெருமாள் ...