அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் - 603104, செங்கல்பட்டு .
Arulmigu Sthalasayana Perumal Temple, Mamallapuram - 603104, Chengalpattu District [TM001718]
×
Temple History
தல பெருமை
தல வரலாறு
முன்னொரு காலத்தில் காடுகளால் சூழப்பட்ட இத்திருத்தலத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் புண்டரீக மகரிஷி.ஒரு நாள் அருகிலுள்ள திருக்குளத்தில் தாமரை மலர் ஒன்று முனிவரின் சிந்தையைக் கவர்ந்தது. முனிவர் அம்மலரைக் கொய்து பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணி மலரை கடற்கரையில் கடல்நீரைத் தன் கைகளினால் இராப்பகலாக தொடர்ந்து இறைத்து கொண்டிருந்தார்.முனிவரின் தளரா பக்தி உள்ளத்தைக் கண்டு ஸ்ரீமந் நாராயணனும் முனிவருக்கு அருள்புரிய ஒரு முதியவர் கோலத்தில் வந்து ஐயா முனிவரே நான் மிகவும் களைத்துப்போய், பசியோடு வந்திருக்கிறேன். தாங்கள் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். உமக்குப் புண்ணியம் உண்டு. தாங்கள் வரும்வரை நான் கடல்நீரை இறைத்துக்கொண்டிருக்கிறேன். என்று கூறி தன்...தல வரலாறு
முன்னொரு காலத்தில் காடுகளால் சூழப்பட்ட இத்திருத்தலத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் புண்டரீக மகரிஷி.ஒரு நாள் அருகிலுள்ள திருக்குளத்தில் தாமரை மலர் ஒன்று முனிவரின் சிந்தையைக் கவர்ந்தது. முனிவர் அம்மலரைக் கொய்து பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணி மலரை கடற்கரையில் கடல்நீரைத் தன் கைகளினால் இராப்பகலாக தொடர்ந்து இறைத்து கொண்டிருந்தார்.முனிவரின் தளரா பக்தி உள்ளத்தைக் கண்டு ஸ்ரீமந் நாராயணனும் முனிவருக்கு அருள்புரிய ஒரு முதியவர் கோலத்தில் வந்து ஐயா முனிவரே நான் மிகவும் களைத்துப்போய், பசியோடு வந்திருக்கிறேன். தாங்கள் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். உமக்குப் புண்ணியம் உண்டு. தாங்கள் வரும்வரை நான் கடல்நீரை இறைத்துக்கொண்டிருக்கிறேன். என்று கூறி தன் திருக்கரங்களால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். முனிவரும் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வந்தார். கடல்நீர் உள்நோக்கிச் சென்று கடலில் வழி தோன்றியது. ஆனால், முதியவரை காணவில்லை. அப்போது முனிவரே இங்கே வாருங்கள் என ஒலிவந்த திசைநோக்கிச் சென்றார்.முதியவராக வந்தவர் திருமாலாக மாறி முனிவர் வைத்துச் சென்ற மலரை தன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டு தரையில் புஜங்கசயனத்தில் முனிவருக்கு காட்சி கொடுத்தருளினார். தரையில் படுத்துக் காட்சி கொடுத்ததினால் தலசயனம் என்ற திருநாமத்துடன் பற்பல நிலைகளில் வழிபாட்டில் இருந்த அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோயில்கள் கடலின் பேரலைகளால் சிதைந்துவிட்டன.பின்பு கி.பி..14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் என்ற மன்னன் ஊரின் மத்தியில் இக்கோயிலைக் கட்டி அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாளை பிரதிஷ்டை செய்தான் என்றும் , பாம்பு புற்றினுள் பல்லாண்டுகள் மறைந்திருந்த உற்சவரைக் ( உலகுய்ய நின்றான் என்பவரை ) கோயிலில் எழுந்தருள வித்தான் என்றும் தலவரலாறு கூறுகிறது. இத்திருக்கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 13-5-1998 அன்று மஹாசம்ப்ரோக்ஷ்னம் மிகச் சிறப்பாக நடைப்பெற்று தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது. ஸ்ரீமந் நாராயணன் தன் திருக்கரங்களால் கடல்நீரைத் தொட்டு இறைத்ததினால் இத்தலம் அர்த்த சேது என்ற புண்ணிய தீர்த்த ஸ்தலமாகிறது. இங்கு கடலில் நீராடி ஸ்ரீஸ்தலசயனப் பெருமாளை பக்தியோடு வணங்கி வழிபட்டால் இராமேசுவரத்தில் நீராடிய பலன் கிடைக்கும், வறுமை விலகி செல்வம் பெறுவர்.
வரலாற்றுக் குறிப்பு
இத்தலம் வைணவ வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்ற சிறப்புடையது.
மேலும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் போற்றி மங்களாசாசனம் செய்துள்ளார். கடும்பரிமேல் கற்கியை நான்கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே என்றே அருளிச் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.
இக்கோயில் பல்லவர்கள் காலத்திலேயே சிறப்பான வழிபாட்டில் இருந்தவை என்பதை ஆழ்வார்களின் பாசுரங்களால் அறிய முடிகிறது , ஆனால் இத்திருக்கோயில் கடலுக்கு அருகாமையில் உள்ளதால் இயற்கை சீற்றத்தால் அழிவுற்றது. பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மீண்டும் கோவில் கட்டப்பட்டதைக் இக்கோவிலில் காணும் தூண் சிற்பங்களின் மூலம் அறியமுடிகிறது. பிற்காலத்தில் பல்வேறு திருப்பணிகளும் இக்கோயிலில் நடைப்பெற்றுள்ளன.