இத்திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான 63 வது திவ்ய தேசமாகும் .இத்தலம் பூத்தத்தாழ்வார் அவதார ஸ்தலம் மற்றும் திருமங்கையாழ்வரால் மங்களசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் ஆகும். மேலும் இத்திருக்கோயில் புண்டரீகமகரிஷிக்கு திருமால் காட்சி கொடுத்த அர்த சேது ஸ்தலமாகும் , மற்றும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு எம்பெருமானை தரிசிப்பது சிறப்பம்சமாகும் . உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் சிற்பங்கள் நிறைந்த அர்ஜனன் தபசு வெண்னை உருண்டை கல் மற்றும் கிருஷ்ண மண்டபம் அருகே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.