அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Mutheeswarar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001733]
×
Temple History
தல வரலாறு
முத்தீசுவரர் தலவரலாறு
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் காஞ்சி , எல்லா உலகங்களும் அழிகின்ற போதும் அழியாத காஞ்சி, முத்திநகரங்கள் எழினுள் முக்கியமானது காஞ்சி என்றும் வேறுபல சிறப்புக்களும் உடையது காஞ்சி மாநகரம், அந்த நகரில் ஆடிசன்பேட்டை , காந்திரோடு என வழங்கும் நகரின் நடுநாயகமான பகுதியில் அமைந்துள்ளது முத்தீசுவரர் திருக்கோயில் ஆகும் . அளவில்லாத சிறப்புக்களை உடைய அத்திருக்கோயிலின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காணலாம்.
காசிபர் என்பவர் பெரிய தவ முனிவர் . அவருக்கு கத்துரு, சுபருணை என்று இரண்டு மனைவியர். அவர்கள் இருவரும் தாமே அழகுடையவர் என்று தங்களுக்குள் போட்டியிட்டனர். அவர்களில் அழகில் சிறந்தவர் யார் என்று வெல்லுகிறார்களோ, அவர்களுக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்று பந்தயம் வைத்துக் கொண்டனர். இருவரும் காசிபரிடம் சென்று...முத்தீசுவரர் தலவரலாறு
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் காஞ்சி , எல்லா உலகங்களும் அழிகின்ற போதும் அழியாத காஞ்சி, முத்திநகரங்கள் எழினுள் முக்கியமானது காஞ்சி என்றும் வேறுபல சிறப்புக்களும் உடையது காஞ்சி மாநகரம், அந்த நகரில் ஆடிசன்பேட்டை , காந்திரோடு என வழங்கும் நகரின் நடுநாயகமான பகுதியில் அமைந்துள்ளது முத்தீசுவரர் திருக்கோயில் ஆகும் . அளவில்லாத சிறப்புக்களை உடைய அத்திருக்கோயிலின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காணலாம்.
காசிபர் என்பவர் பெரிய தவ முனிவர் . அவருக்கு கத்துரு, சுபருணை என்று இரண்டு மனைவியர். அவர்கள் இருவரும் தாமே அழகுடையவர் என்று தங்களுக்குள் போட்டியிட்டனர். அவர்களில் அழகில் சிறந்தவர் யார் என்று வெல்லுகிறார்களோ, அவர்களுக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்று பந்தயம் வைத்துக் கொண்டனர். இருவரும் காசிபரிடம் சென்று தங்களுக்குள் யார் அழகி? என்று கேட்க , காசிபர் கத்துருவே அழேகி என்றார் . அதனால் தோற்றவளாகிய சுபருணையை கத்துரு சிறையில் அடைத்தனள்.
சுபருணை தன்னைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படிக்கேட்க , அதற்குக் கத்துரு தேவருலகில் சந்திரனிடமுள்ள அமுதத்தைக் கொண்டு வந்து தந்தால் விடுவிப்பதாகக் கூறினாள். அதனால் வருந்திய சுபருணை விரதமிருந்து காசிப முனிவரை வேண்டி , அவருடைய அருளால் , கருடனை மகனாகப் பெற்றாள். அவள் , தன் மகனிடத்தில், தான் சிறைப்பட்ட காரணத்தை வருத்தமுடன் கூறி , தன்மகனை வானுலகம் சென்று சந்திரனிடமுள்ள அமுதத்தைக் கொண்டு வந்து, கத்துருவினிடம் கொடுத்துத் தன்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வேண்டினாள். கருடனும் தன் தாயின் துன்பத்தைத் தீர்க்கவேண்டி முத்தீசப் பெருமானை வழிபட்டு வானுலகம் சென்றான். அங்கே அமுதக் குடத்திற்குக் காவலிருந்த தேவர்களுடன் பெரும் போர் செய்தான். அவர்களைத் தன் வலிமையான சிறுகுகளின் காற்றினால் துரத்தி அடித்து , அங்கிருந்து ஓடுமாறு செய்தான். பின்னர்அமுதக் குடத்தினை எடுத்துக் கொண்டு பூவுலகம் திரும்பி வந்தான்.
வரும் வழியில் , அமுதம் கொண்டு செல்லும் கருடனைக் கண்டு கோபித்து, திருமால் கருடனுடன் போருக்கு வந்தார். கருடன் தன் தாயின் சிறையை நீக்க வேண்டும் என்ற காரணத்தில் மிகவும் கடுமையாகத் திருமாலுடன் போரிட்டான். இப்போர் 21 நாள்கள் நடந்தன. கருடனுடைய ஆற்றலைத் திருமால் வியந்து , உன்னுடைய ஆற்றலை மெச்சினேன். நீ உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் நான் தருகிறேன் என்று கூற , கருடன் திருமாலை நோக்கி, நீ வேண்டிய வரத்தை நான் தருகிறேன், நீ கேள் என்றான். திருமால் மகிழ்ந்து நீ என்னை வாகனமாகச் சுமப்பாயாக என்ன, நான் என் தாயின் சிறைவிடுவித்து விட்டு வந்து உனக்குப் பணி செய்கிறேன் என்று கூறி வந்தான். பூவுலகம் வந்து அமுதத்தைத் தாயினிடம் கொடுத்து விடுதலை பெற்றுத் தந்து தாயின் துன்பத்தை நீக்கினான். இவ்வாறு தாயின் சிறை நீக்கவும் , அமுதம் கொண்டு வரவும் முனைந்த கருடன் வழிபட்ட இலிங்கமே முத்தீசுவர் என்ற மூல லிங்கமாகும். இதனைக் காஞ்சிப் புராணத்தில் மாதவச் சிவஞான சுவாமிகள் அவர்கள் புள்ளரசு தொழுது சீர்க்கொற்றம் உற்ற முத்தீச்சரம் கூறுவாம் என்ற தொடங்கிப் பாடுகிறார். (புள்அரசு பறவைகளின் அரசன் கருடன்) .