முக்தி நகர் ஏழினுள்ளும் முக்கியமாம் கச்சி எனவும் நகரேஷீ காஞ்சி எனவும் காசியிலும் உயர்வுடையது காஞ்சி எனவும் புகழ்ப்பாடுகின்ற பழமையான நகரம் காஞ்சிபுரம் இத்திருநகரில் ஏகாலியர் குலத்தில் ஒரு சிவநேசர் தோன்றினார் அவர் மனம், வாக்கு , காயம், மூன்றினையும் சிவபெருமான் திருவடியிலேயே செலுத்துபவர் அடியவர்கள் உள்ளத்தின் திருக்குறிப்பை அறிந்து போற்றி அவர்களுக்குத் தொண்டு செய்ததனால் அவர் திருக்குறிப்புத் தொண்டர் என்றே அழைக்கப்பட்டார் அவர் சிவனடியர்களின் ஆடைகளை வெளித்துக் கொடுப்பதைப் பெரு விருப்பத்துடன் செய்து வந்தார். அடியவர்களின் ஆடையில் அழுக்கினை நீக்கிக் கொடுத்து வந்த திருகுறிப்புத் தொண்டருடைய பழுவினையும் நீங்கி கொண்டே வந்தது. இந்நிலையில் இறைவன் திருக்குறிப்புத் தொண்டருக்கு அருள்புரிய விரும்பினார். இறைவன் சிவனடியாராகத் தொண்டர் முன் தோன்றினார். சிவனடியார் அணிந்திருந்த ஆடை மிகவும்...