அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில், அச்சிறுபாக்கம் - 603301, செங்கல்பட்டு .
Arulmigu Aatcheeswarar Swamy Temple, Acharapakkam - 603301, Chengalpattu District [TM001755]
×
Temple History
தல வரலாறு
இத்திருதலத்தின் வரலாறு தனிப்பெருமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் பற்றிய மூன்று விதமான தல புராணங்கள் உள்ளன.
அதில் ஒன்று, முன்பு ஒரு சமயம் பாண்டிய மன்னன் ஒருவன் பெரும் படையோடு வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றான். இவ்வூர் வழியாக அவன் சென்றபோது காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த கானகம் ஒன்றைக் கண்டான். காட்டில் பொன்னிற உடும்பு ஒன்ற ஓடுவதைப் பார்த்தான். அவன் அதனைத் துரத்திக் செல்கையில் சரக்கொன்றை மரத்தின் அடியிலிருந்த பொந்து ஒன்றில் அது ஓடி மறைந்தது. ஏவலர்கனை அழைத்து அம்மரத்தை...இத்திருதலத்தின் வரலாறு தனிப்பெருமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் பற்றிய மூன்று விதமான தல புராணங்கள் உள்ளன.
அதில் ஒன்று, முன்பு ஒரு சமயம் பாண்டிய மன்னன் ஒருவன் பெரும் படையோடு வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றான். இவ்வூர் வழியாக அவன் சென்றபோது காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த கானகம் ஒன்றைக் கண்டான். காட்டில் பொன்னிற உடும்பு ஒன்ற ஓடுவதைப் பார்த்தான். அவன் அதனைத் துரத்திக் செல்கையில் சரக்கொன்றை மரத்தின் அடியிலிருந்த பொந்து ஒன்றில் அது ஓடி மறைந்தது. ஏவலர்கனை அழைத்து அம்மரத்தை வெட்டும்படி ஆணையிட்டான் அரசன். ஏவலர்கள் கோடாரியால் அம்மரத்தின் அடிபாகத்தை வெட்டக் குருதி வெளிப்பட்டது. மண்ணை அகழ்ந்து பார்க்கையில் தானாய்த் தோன்றிய சிவலிங்கம் ஒன்றைக் கண்டார்கள் அன்று முழுவதும் சிவனுக்கு ஏற்பட்ட தழும்பை எண்ணி வருந்தியபடியே உறக்கத்தில் ஆழ்ந்தான் மன்னன். அவன் கனவில் எம்பிரான் தோன்றித் தமக்கு ஒரு கோவில் கட்டும்படி பணித்தார். மன்னனும் அந்த ஆணையின்படி திரிநேத்திரதாரி என்ற முனிவரிடம் வேறு எங்கும் இல்லாத விதத்தில் கோயில் ஒன்றைக் கட்டும்படி கூறி பொன், பொருள் கொடுத்துவிட்டு வடநாடு சென்றார். முனிவர் இத்திருக்கோயிலை இரண்டு கருவறைக் கொண்டு அமைத்தார். இராகோபுரத்திற்கு நேராக ஒரு கருவறையும், கொடிமரம், நந்தி, பலிபீடத்திற்கு நேராக ஒரு கருவறையும் அமைத்தார். பாண்டிய மன்னன் வடநாடு சென்று திரும்பி வரும்போது ஆலயத்தைக் கண்டு வியப்புற்றான். முனிவரை அழைத்து ஆலயத்தை இவ்வாறு அமைத்ததற்கு என்ன காரணம் என்று வினாவினான். எம்மை ஆட்கொண்டவர் எம்மையாட்சீஸ்வரர் என்றும், உம்மை ஆட்கொண்டவர் உமையாட்சீஸ்வரர். உம்மை ஆட்கொண்டவர் சன்னதிக்கு நேராக இராஜகோபுரம் (பிரதான வாயிலும்) எம்மை ஆட்கொண்டவர் பிரதான சன்னதி நந்தி, பலிபீடம், கொடிமரம் அமையப் பெற்று உள்ளது, என்று இரு கருவறை அமைத்ததற்கு பாண்டிய மன்னனுக்கு எடுத்துரைத்தார். முனிவர் கடுந்தவம் இருந்து வந்தார். அவர் தவத்தை மெச்சிய ஆட்சீஸ்வரர் அவர்முன் தோன்றி யாது வரம் வேண்டும எனக்கேட்க, முன்னர் திரிபுவனம் எரித்தபோது தேரினின்று இறங்கியக் காட்சியைக் காண்பிக்கும்படி திரிநேத்திரதாரி இறைவனிடம் வேண்டினார். அவ்வாறே எம்பிரானும் அவருக்குக் காட்சி அளித்தார்.
அன்று முதல் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரைப் பெருந் திருவிழாவில் ஏழாம்நாள் திருத்தேர் உற்சவத்தில் அந்திசாயும் நேரத்தில் திருக்கோயில் உள்பிரகாரத்தில் கொன்றை மரத்தடியில் திருநேத்திரதார் முனிவருக்கு தேரில் இருந்து இறங்கி இறைவன் இன்றளவும் காட்சியளித்து வருகிறார். அதுவே கொன்றையடி சேவை என இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறது.
/மற்றொரு தல வரலாற்றின் படி, பாண்டிய நாட்டு அரசன் தன் நாட்டிலுள்ள கோயில் ஒன்றில் திருப்பணிக்காகக் கங்கை ஆற்றின் மணல் முட்டைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்தான். அப்போது அந்த வண்டிகள் இந்த இடத்தின் அருகில் வந்து மேலே செல்லாமல் நின்றுவிட்டன. அவற்றை ஊக்கிச் செலுத்த முயன்றனர். அதனால் வண்டிகளின் அச்சுகள் முறிந்துவிட்டன். அந்த செய்தி, அந்த மன்னனுக்கு வான்ஒலி வழியாகச் கேட்கவே, அவனே நேரில் வந்து இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்வித்தான். அந்த வண்டிகள் வந்து நின்ற இடமே, வண்டிக்குப்பம் என்று இன்றும் பெயர் வழங்கப்பெறுகிறது. இறைவன் சுயம்பு உருவானவர. இவர் பாக்கபுரேசர், ஆட்சீசர், ஆட்சிகொண்டார், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக் கானமுடையார் என்னும் திருப்பெயர்களைக் கொண்டவர் என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகளாலும் ஏனைய குறிப்புகளாலும் அறிகிறோம்.
அம்பிகைக்கு சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளிமொழியம்மை, அதிசுந்தர மின்னாளம்மை என்ற திருப்பெயர்கள் உண்டு.
/மற்றொரு தல வரலாற்றின் படி, முன்பு ஒரு காலத்தில் தாரகன், வித்யுன்மாலி, கமலாட்சன் ஆகிய மூன்று அசுரர்களும் பிரம்மதேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்கள் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர் அசுரர்கள் முன்தோன்றி, உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் முறையே தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆனதும், பறக்கும் வல்லமை பொருந்தியதுமான மூன்று கோட்டைகள் வேண்டும் என்று வேண்டினர். அவரும் அவ்வாறே வரம் அளித்தார். அவர்கள் அக்கோட்டைகளுடன் வானத்தில் பறந்து சென்று தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கவொண்ணா இடுக்கண் புரிந்து வந்தனர்.
தேவர்கள் துன்பம் தாங்காது சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று அசுரர்களை ஒடுக்க வானேழு உலகினை மேல்தட்டாகவும், கீழே உள்ள உலகினை அடித்தட்டாகவும், சூரியன் சந்திரனை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் உள்ள தேரில் மேருமலையை வில்லாகவும், வாசகியை நானாகவும், திருமாலே அம்பாகவும் கொண்டு பிரம்மா தேரை ஓட்டி முப்பராதிகளை வெல்லச் செல்லும்போது எல்லோரையும் அழைத்து துனைகொண்ட சிவன், தன்னை அழைக்காததால் கோபம் கொண்ட விநாயகப் பெருமான் அத்தேரின் அச்சினை இரண்டாக முறித்து விட்டார்.
சிவபெருமான் தேவாம்சம் பொருந்திய தேரில் இருந்து இறங்கிய விநாயகப் பெருமானை வணங்கி, விநாயக பெருமானுக்கு முக்கன் உடைய தேங்காய் பலியிட்டு செதூர் தேங்காய் உடைத்து) மீண்டும் அத்தேரில் சென்று முப்பராதிகளை அழிக்க திருவதிகை என்ற ஸ்தலத்திற்கு செல்கிறார்.
தேர் அச்சு - இற்ற காரணத்தினால் அச்சிறுபாக்கம் என இவ்வூர் பெயர் பெற காரணம் ஆகிறது.