சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகாமையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தொண்டை நன்நாட்டின் முப்பத்திரண்டு சிவமுக்தி ஸ்தலங்களில் 29-வது ஸ்தலமும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்(அப்பர்)ரால் பாடல் பெற்ற ஸ்தலம் கண்ணுவ, கௌதமர், அகத்தியர், உமாபதி சிவாச்சாரியார், அருணகிரிநாதர் போன்ற மாமுனிவர்கள் வழிபட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் இரண்டு மூலஸ்தானங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் மாபெரும் திருவிழாவான சித்திரை பிரம்மோற்சவத்தில் திரலான பக்தர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்கின்றனர். பரிகார ஸ்தலமாகும்.