Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகேச்சரசுவாமி திருக்கோயில், திருநாகேச்சரம் - 600069, காஞ்சிபுரம் .
Arulmigu Nageshwara Swamy Temple, Thirunageshwaram - 600069, Kancheepuram District [TM001760]
×
Temple History

தல பெருமை

குன்றத்தூரில் உள்ள திருநாகேசுவரம் அல்லது சடையாண்டீடிஸ்வரர் கோயில் வழிபாடு சிறப்பு பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயில் வரலாறு கூறும் 45 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி 1182) சேக்கிழான் புலவப் பெருமாளான துண்டுடக நாடுடையான் (தொண்டை நாடு) விளக்கெரிக்க தானம் அளித்துள்ளான். மேலும் இக்கோயிலில் ரேவதி நட்சத்திர நாளில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ள உழந்தை உடையான் வடுகநாதன் என்பவர் தானமளித்துள்ளார். காமாட்சி அம்மன் சன்னதி 1192ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டிற்காக தானம் அறித்துள்ளனர். 1206ஆம் ஆண்டில் இக்கோயிலில் திருவூடல் பட்டியாக ஊரார் தானம் அளித்துள்ளனர். இதுபோன்று பலர் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 14ஆம்...