குன்றத்தூர் அருகில் உள்ள வடதிருநாகேச்சரம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில், சென்னையைச் சுற்றியுள்ள நவகிரக தலங்களில் ராகு தலமாக விளங்குகிறது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேச்சரத்தில் எழுந்தருளியுள்ள நாகேச்சரப் பெருமானை தமது ஆன்மார்ந்த தெய்வமாக வணங்கி வழிபட்ட தெய்வ புலவர் சேக்கிழார் பெருமான் தாம் பிறந்த குன்றத்தூரில் அதே போல் ஒரு திருக்கோயிலை அமைக்க வேண்டுமென்று உருவாக்கியதுதான் இத்திருக்கோயில். இங்குள்ள மூலவரான திருநாகேச்சரர், சேக்கிழார் பெருமானின் திருக்கரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆகும். பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் 45 கல்வெட்டுகள் உள்ளன. என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கோயிலுக்கு வெளியே வலபுறமாக உள்ள திருக்குளம் சூரிய புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. தலவிருட்சமாக செண்பக...